கல்வியில் வாழ்வியல் திறன்கள்.

கல்வியில் வாழ்வியல் திறன்கள்.

கல்வி என்பது படிக்கும் பாடத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவ வேண்டும் மேலும் மனித ஆளுமைப் பண்புகளையும், வல்லமையையும் உருவாக்க வல்ல மனித விழுமியங்களை பயிற்றுவிப்பதாக அமைய வேண்டும்

விழுமங்கள் என்பன உலகம் எப்படி இருக்கின்றது, என்பதை விடவும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.

வாழ்வியலை திறன்களை, மனிதனின் உள்ளார்ந்த பண்பாக நின்று அவனை வாழ்க்கை முழுவதும் நெறிப்படுத்த கூடியதாக வாழ்க்கையோடு ஒன்றி கலந்து விடும் படி முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

மனிதப் பண்பை ஊட்டி அவனுடைய ஆளுமையை மேம்படுத்தி, சமூகத்தில் சிறந்த வாழ்வை நடத்தும் அளவிற்கு நல்லதொரு குடிமகனாக உருவாக வல்லதாக கல்வி அமைய வேண்டும்.

பெற்ற அறிவை எவ்வாறு நன் முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், எது சரி, எது தவறு என இனம் காணும் அளவும் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய கடமையை இளைய சமூகத்திற்கு கற்றுத்தர வேண்டும்.

கல்வியின் நோக்கம் சமூக கட்டமைப்பில் குழந்தைகளை பொறுப்புள்ள ஆரோக்கியமான அங்கங்களாக மாற்றி அதன் மூலம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு மாணவர்கள் பங்கு அளிக்கும் வகையிலும், அதன் வாயிலாக தன்னுடைய தனி வாழ்விற்கு அர்த்தமும், நோக்கமும் கற்பித்து   மேம்பட்ட பண்புமிக்க வாழ்க்கையை அமைக்க உதவக்கூடியதாக இருக்க வேண்டும்.

வாழ்வியல் திறன்கள் என்பது தனியாக கற்பிக்கப் படுவதாக இன்றி அனைத்துப் பாடங்களிலும் இணைத்து இயல்பாக மாணவர்களின் வாழ்வியல் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்கள் தாமாகவே உணரும் வகையிலும் அமைந்து இருக்க வேண்டும்.

தங்கள் அன்றாட செயல்கள், வாழ்க்கை முறையிலிருந்தே வாழ்வியல் திறன்களை பெற வேண்டுமேயின்றி, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கற்பிக்கப்படுவதாக இருக்கக் கூடாது.

கல்வியின் வாயிலாக மேம்படுத்த வேண்டிய, மற்றும் மேம்பட்டு கொண்டிருக்கும் பல்வேறு வாழ்வியல் திறன்கள் தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளியல், சூழ்நிலை இயல் பாடங்கள் பாடங்கள் வாயிலாக மாணவர்களிடம் சிறந்த பல திறன்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றில் சில திறன்களை பற்றி காண்போம்.

1.ஒழுங்குமுறை
எந்த செயலிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்குமுறையும் அவசியம், பொருட்களை அதற்குரிய இடத்தில் வைத்தல், சரியான நேரத்தில், சரியான செயல்களை முன்னமே திட்டமிட்டு முறையாக செய்தல்.

2.பணிவுடைமை
வயது, பணி, அறிவு , ஆற்றல் என்று நம்மை சுற்றியுள்ள அனைவரும் ஏதோ ஒன்றில் நம்மை காட்டிலும் உயர்ந்தவராய்  இருப்பர் எனவே ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் சமூகத்திடமும் பணிவுடன் பழக வேண்டும்.

3.வாய்மை
தன்னை சுற்றியுள்ள தன்னை சார்ந்த யாரையும் ஏமாற்றவும், மனதை புண்படுத்தவும் முனையாமல் நேர்மறையாக சிந்தித்து, நேர்மறையான செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

4.உறுதியுடமை
செய்ய வேண்டிய
செயல்களை, அச்
செயலில் ஈடுபடும் முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும். உறுதிகொண்ட செயல்களை தவறாது, சரியான நேரத்தில் நேர்த்தியாக செய்து முடித்தல் வேண்டும்.

5.ஒழுக்கமுடைமை வெற்றியாளர்கள் அனைவரின் அடிப்படை பண்பாக இருப்பது ஒழுக்கம் , தோல்வியுற்ற பலரின் பலவீனமாக இருப்பது அவர்களிடம் காணப்பட்ட ஒழுக்கம் இன்மையே, எனவே எச்சூழலிலும் ஒழுக்கத்தை கைவிடக் கூடாது.

6.முறையான உழைப்பு
உழைப்பே உயர்வு தரும், எனவே எப்பொழுதும் பயனுள்ள ஒரு செயலை செய்து கொண்டே இருக்க வேண்டும். பயனற்ற விதத்தில் நேரத்தையும்- உழைப்பையும் வீணாக்க கூடாது.

7.நேர்மை
வகுப்பறை, பள்ளி, குடும்பம், சமூகம், சக நண்பர்கள் என அனைத்து தளங்களிலும் எச்சூழலிலும் நேர்மையை கைவிடக் கூடாது.

8.மன அமைதி
வெற்றி -தோல்வி ,இன்பம்- துன்பம் , லாபம்-  நட்டம் என்று இருவேறு எதிர் எதிர் சூழ்நிலைகளில் தோன்றும் மகிழ்ச்சி சார் மன அமைதியின்மை ,துன்பம் சார் மன அமைதியின்மை என இரண்டு நிலைகளிலும் மனதினை கட்டுப்படுத்த வேண்டும்.

9.மிதத் தன்மை
உண்ணுதல், பொழுதுபோக்கு, கொண்டாட்டம், தூக்கம் ,பேச்சு என அனைத்திலும் மனக்கட்டுப்பாட்டுடன் மித தன்மையை கடைபிடிக்க வேண்டும்.

10.சிக்கனம்
நேரம், பணம், பேச்சு, தண்ணீர் என அனைத்தையும் முறையாக பயன்படுத்த வேண்டும். இவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

11.துப்புறவு
தன்சுத்தம் ,வகுப்பறை சுத்தம், பள்ளி தூய்மை, சுற்றுச்சூழல் தூய்மை, தன் குடும்பம் சார்ந்த தூய்மையை எப்பொழுதும் எங்கேயும் கடைப்பிடிக்க வேண்டும்.

12.நாவடக்கம்
தேவையான இடத்தில் தேவைக்கு ஏற்ப மட்டும் முறையான சரியான சொற்களை பயன்படுத்தி பேசவேண்டும் , வெட்டிப்பேச்சு தவிர்க்க வேண்டும்.
"ஒரு வார்த்தையில் சொல்லக்கூடியது இரண்டு வார்த்தைகளால் சொல்ல முற்படக்கூடாது வார்த்தைகளால் சொல்ல முற்படக்கூடாது."

13.பிறர் உணர்வுகளை மன எழுச்சிகளை பிறர் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்( empathy)
பிறர் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து கொண்டு அதனை மதிக்க வேண்டும் ,பிறர் உணர்வுகளை அவருடைய இடத்திலிருந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சுய இரக்கம்(sympathy) இருக்கக்கூடாது.

14.கருத்து வேறுபாடுகளை கையாளுதல்
இரு நபர், இரு குழு, இருவர்கம் இடையேயான கருத்து வேறுபாடுகளை எவ்வித பாரபட்சமும் இன்றி, நடுநிலையுடன் அணுகவும், நடுநிலையுடன் தீர்க்கும் பண்பும் வேண்டும்.

15.கூடி செயலாற்றுதல்
தன் குழுவினருடன் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தன் குறிக்கோளை அடைய தான் சார்ந்த குழுவின் வெற்றியை நிலை நாட்ட, கருத்து வேறுபாடுகளை கைவிட்டு இணைந்து செயலாற்ற வேண்டும்.

மேற்கண்ட திறன்கள் மட்டுமின்றி மேலும் பல வாழ்வியல் திறன்கள் உள்ளன அனைத்து திறன்களையும் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் பாடநூல் சார்ந்தும் அதனைத் தாண்டியும் மாணவருக்கு மேம்படுத்தும் வல்லமை மிக்கதாக கல்வி அமைப்பு மேம்படவேண்டும் , 

                              இரா. பச்சியப்பன்.,

                         ஆசிரியர் பயிற்றுநர்.

Comments

Popular posts from this blog

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு