Posts

Showing posts from December, 2018

புரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத்

புரட்சித் தளபதி சந்திர சேகர ஆசாத் “ உன் பெயர் என்ன” “ என் பெயர் ஆசாத் (விடுதலை)” “ உன் அப்பா பெயர் என்ன” “ சுதீன் (சுதந்திரம்)” “ உன் வீடு எங்கே இருக்கிறது” “ சிறைச்சாலையில்” இப்படி நீதிமன்றத்தில் பதில் கூறிய இளைஹனுக்கு வயது பதினான்கு. அவர் பெயர் சந்திர சேகர ஆசாத். காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருத மேற்கல்வி கற்க வந்த போதே விடுதலைப்போரில் - ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தவர் சந்திரசேகர ஆசாத். பதினான்கு வயது என்பதால் நீதிமன்றம் அவருக்குப் பதினைந்து கசையடித் தண்டனை அளித்தது. கசையடிகளைத் தாங்கிக் கொண்டு வெளியே வரும்போது “வந்தே மாதிரம்”, “மகாத்மா காந்திஜிக்கு ஜே” என்று முழக்கமிட்டார். இது நடந்தது 1922 ஆம் ஆண்டு. மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டம், சாடுவா தாலுகா, பாவ்ரா கிராமத்தில் பண்டிட் சீதாராம் திவாரி - ஜெகராணி தேவி தம்பதியினருக்கு 1906 ஆம் ஆண்டு ஜிலை 23 ஆம் நாள் பிறந்தார். ஆசாத் சிறுவயதில் படிப்பைவிட வில் - அம்பு விடுவதிலும், துப்பாக்கிச் சுடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வட்டார அலுவலகத்தில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். ஆசாத்துக்கு அங்கு வேலை

தேர்வை எதிர் கொள்ள மாணவர்களுக்கான ஆலோசனைகள்

தேர்வுப் பதற்றத்தைச் சமாளித்தல் "எதார்த்தமான இலக்குகளை அமைத்துக்கொண்டு, பணிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு செயல்பட்டால் தேர்வுப் பதற்றத்தை வெல்லலாம்" தேர்வுகள் என்றாலே, நம்மில் பலருக்கு அழுத்தம் வந்துவிடும், பதற்றம் வந்துவிடும். அழுத்தம் என்பது தவறல்ல, சாதாரணமான அழுத்தம் ஒருவருடைய வேலைக்கு உதவும், அவரை வேகமாகச் சிந்திக்கச்செய்யும், சிறப்பாகச் செயல்படச்செய்யும், அவரது செயல்திறனை மேம்படுத்தும். இதுபற்றிய அனுபவ ஆய்வுகள், ஒரு குறிப்பிட்ட அளவு (சரியான அளவு) அழுத்தமானது ஒருவரை இன்னும் சிறப்பாகச் செயல்படச்செய்யலாம் என்கின்றன. ஆனால், சில நேரங்களில், பதற்றம் மிகவும் அதிகமாகிவிடுகிறது, ஒருவருடைய செயல்திறனைப் பாதிக்கத்தொடங்கிவிடுகிறது. நம்மில் பலருக்கு, தேர்வு தொடர்பான பதற்றம் இருக்கிறது. ஆகவே, அதன் அடையாளங்களைக் கண்டுகொண்டு, அதனைச் சிறப்பாகக் கையாளுவது மிகவும் அவசியம். பதற்றம் எதனால் உண்டாகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், பதற்றத்தைக் குறைப்பது சாத்தியம். அதன்பிறகு, பதற்றத்தைக் கட்டுப்படுத்தலாம், மற்ற வேலைகளைக் கவனிக்கலாம். பதற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்: தூக்கமின்மை. எரிச்சல், முன

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

மௌலானா ஹஸ்ரத் மஹானி 1878 ஆம் ஆண்டு லக்னோ அருகில் உன்னனோ மாவட்டத்தில் மஹன் என்னும் நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சையத் பஜூல் ஹஸன் என்பதாகும். இளமையில் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், உருது, பாரசீகம், அரபி முதலிய மொழிகளில் பாண்டியத்தியம் பெற்றவர்.  கல்லூரி வாழ்க்கையில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்பி மாணவர்களிடையே புரட்சிகர எண்ணத்தை உருவாக்கினார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் காங்கிரஸின் பால் ஈர்க்கப்பட்டு அதன் உறுப்பினராகச் சேர்ந்தார். காங்கிரஸின் தீவிரவாத முகாமாக கருதப்பட்ட பாலகங்காதர திலகரோடு தன்னை இனங்காட்டிக் கொண்டார். திலகர் காங்கிரஸிலிருந்து விலகிய போது தானும் விலகினார்.  காங்கிரஸ் மாநாட்டிலும், முஸ்லீம் லீக் மாநாட்டிலும், கிலாபத் இயக்க மாநாட்டிலும் இந்தியாவுக்கு ‘பூரண சுதந்திரம்' வேண்டுமெனத் தீர்மானங்களை முன்மொழிந்து வரலாற்றில் இடம் பெற்றார்.  இவர் கவிஞர், இதழாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரது எழுதுகோல் இந்திய விடுதலைக்காக எழுதியது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு