Posts

கல்வியில் வாழ்வியல் திறன்கள்.

கல்வியில் வாழ்வியல் திறன்கள். கல்வி என்பது படிக்கும் பாடத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவ வேண்டும் மேலும் மனித ஆளுமைப் பண்புகளையும், வல்லமையையும் உருவாக்க வல்ல மனித விழுமியங்களை பயிற்றுவிப்பதாக அமைய வேண்டும் விழுமங்கள் என்பன உலகம் எப்படி இருக்கின்றது, என்பதை விடவும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. வாழ்வியலை திறன்களை, மனிதனின் உள்ளார்ந்த பண்பாக நின்று அவனை வாழ்க்கை முழுவதும் நெறிப்படுத்த கூடியதாக வாழ்க்கையோடு ஒன்றி கலந்து விடும் படி முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். மனிதப் பண்பை ஊட்டி அவனுடைய ஆளுமையை மேம்படுத்தி, சமூகத்தில் சிறந்த வாழ்வை நடத்தும் அளவிற்கு நல்லதொரு குடிமகனாக உருவாக வல்லதாக கல்வி அமைய வேண்டும். பெற்ற அறிவை எவ்வாறு நன் முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், எது சரி, எது தவறு என இனம் காணும் அளவும் தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய கடமையை இளைய சமூகத்திற்கு கற்றுத்தர வேண்டும். கல்வியின் நோக்கம் சமூக கட்டமைப்பில் குழந்தைகளை பொறுப்புள்ள ஆரோக்கியமான அங்கங்களாக மாற்றி அதன் மூலம் சமூகத்தின் மேம்பாட்டிற்கு மாணவர்கள் பங்கு அளிக்கும் வகையிலும், அதன் வாயிலாக

பள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....

சாதி சார்ந்த, மதம் சார்ந்த, தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒரு பதற்றமான செய்தி தினசரி ஊடகங்களாலும், social media'க்களாலும் பர‌ப்பப்படுகிறது. உடனே அதற்கான கண்டனம், வருத்தம், தொலைக்காட்சி விவாதம், சில மீம்ஸ், சில பதிவுகள் என புற்றிசல் கூட்டம் போல அதிகமாக வந்து ஓர் இரவில் காணாமல் போகிறது. இந்தப் போக்கு நம்மை "இன்று ஒரு பிரச்சனை கூட இல்லையே..!" என்று கவலைப்படும் அளவுக்கு மனநோயாளியாக மாற்றிவிட்டது. சக மனிதர்கள் சந்திக்கும் போது "சவுக்கியமா?.. பார்த்து எத்தனை நாளாச்சு ...?" என்று கேட்ட காலம் மாறி "இன்னக்கி என்ன பிரச்சனை..?" என்று கேட்கும் காலமாகி விட்டது. இதை  அரசியல் அறிவில் எற்பட்ட முன்னேற்றம் என்று பார்ப்பதா அல்லது சக மனிதர்கள் இந்த மனநோய்க்கு பலியாகி விட்டார்கள் என்று பார்ப்பதா எனத் தெரியவில்லை. எந்த சமுகத்திலும் குற்றங்கள், தவறுகள் என்பது அறவே இல்லாமல் போகாது. கொள்கை முரண்பாடுகள், சமுக சிக்கல்கள், வர்க்க வேற்றுமை சுரண்டல்கள் மொத்தமாக இல்லாமல் ஒழிந்துவிடாது. அப்படியான  சமுகத்தை ஒருநாளும் படைத்துவிட முடியாது. ஆனால் மனிதமற்ற இந்தப் போக்கு உலகம் முழுவதும்

அறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்

அறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்   ( சில திருத்தங்களுடன் ; பகிர்வு பதிவு) குழந்தைகள் மிகவும் வெறுக்கப் படக்கூடிய ஒரு இடம் உள்ளது என்றால் அந்த இடம் பள்ளிக் கூடம்தான். அது போன்று குழந்தைகள் மிகவும் பயப்படக்கூடியதும், வெறுக்கப்படக்கூடியதும் எதுவெனில் அது தேர்வுகள்தான். இவ்வாறாக, குழந்தைகளுக்குப் பிடித்தமில்லாத கல்விமுறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு நாம் குழந்தைகளை அனுப்புவதை தோழர் லெனின், “சவுக்கால் அடித்து சொர்க்கத்துக்கு அனுப்புகிறோம்” என்று சொல்கிறார். போராட்டங்கள் பலகண்டு, பல அரசியல் மாற்றங்கள் மூலமாக கல்வியில் சமூக சமத்துவம் நோக்கி நாம் பயணித்து வருகிறோம். கல்வி குறித்து நாம் பேசும் போது குறிப்பாக இரண்டு விசயங்களைப் பேசியாகவேண்டும். 1. ஆரம்பக்கல்வி, 2. அருகாமைப் பள்ளி ஆகிய இரண்டும் முக்கியமானவை. ஒரு குழந்தைக்கு ஆரம்பக் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதுவும் அரசே தனது குடிமக்களுக்கு வழங்கும் கல்வி மிகவும் சரியானதாக அமையவேண்டும். இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு பலவகை இனங்களில் இருந்து, வருவாயின

ஆசிரியரின் மாண்பை உயர்த்தும் பாராட்டும் பண்பு

பாராட்டிப் பழகுவோம் 'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' - என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர். பாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது - மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!! படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும். வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்! இந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம்! சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு? அவரது ஆற்றல்களும

பள்ளிக்கல்வியின் வீழ்ச்சி

பள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ; மாணவர்களின் பாதிப்பும் இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பின், பத்து ஆண்டுகளுக்குள் - அதாவது 1960க்குள் 14 அகவைக் குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி அளித்திட அரசு முயல வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அய்ம்பது ஆண்டுகள் கழித்து - 2010இல் தான் இலவய, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடப்புக்கு வந்தது. 2018ஆம் ஆண்டில் ஆறு அகவை எய்திய சிறுவர்களில் 96 விழுக்காட்டினர் பள்ளியில் பயில் கின்றனர். ஆனால் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது. ‘பிரதாம்’ என்கிற தொண்டு நிறுவனம் 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது “கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை” (Annual Status of Education Report – ASER - ஆசர்) எனப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளைக் கொண்ட 596 மாவட்டங்களில் 5.5 இலட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 930 ஊர்களில் 15,749 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டிற்கான ஆ