Posts

Showing posts from April, 2019

அறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்

அறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்   ( சில திருத்தங்களுடன் ; பகிர்வு பதிவு) குழந்தைகள் மிகவும் வெறுக்கப் படக்கூடிய ஒரு இடம் உள்ளது என்றால் அந்த இடம் பள்ளிக் கூடம்தான். அது போன்று குழந்தைகள் மிகவும் பயப்படக்கூடியதும், வெறுக்கப்படக்கூடியதும் எதுவெனில் அது தேர்வுகள்தான். இவ்வாறாக, குழந்தைகளுக்குப் பிடித்தமில்லாத கல்விமுறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு நாம் குழந்தைகளை அனுப்புவதை தோழர் லெனின், “சவுக்கால் அடித்து சொர்க்கத்துக்கு அனுப்புகிறோம்” என்று சொல்கிறார். போராட்டங்கள் பலகண்டு, பல அரசியல் மாற்றங்கள் மூலமாக கல்வியில் சமூக சமத்துவம் நோக்கி நாம் பயணித்து வருகிறோம். கல்வி குறித்து நாம் பேசும் போது குறிப்பாக இரண்டு விசயங்களைப் பேசியாகவேண்டும். 1. ஆரம்பக்கல்வி, 2. அருகாமைப் பள்ளி ஆகிய இரண்டும் முக்கியமானவை. ஒரு குழந்தைக்கு ஆரம்பக் கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதுவும் அரசே தனது குடிமக்களுக்கு வழங்கும் கல்வி மிகவும் சரியானதாக அமையவேண்டும். இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு பலவகை இனங்களில் இருந்து, வருவாயின