Posts

Showing posts from January, 2019

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு

உணர் திறனறிவு – EMOTIONAL INTELLIGENCE ஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “ Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. மாணவர்கள், அவர்களின் பெற்றோர், சக ஆசிரியர்கள் என நேரடியாக சமுதாயத்துடன் தொடர்பில் உள்ள ஆசிரியர் பேரினத்திற்கு EQ பற்றிய புரிதல் அவசியம், அது என்ன EQ என்பதைக் காண்போம். ”உணர் திறனறிவு” என்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும். டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார். அதையாவன, 1. தன்னையறிதல் (self-awareness) 2. சுயகட்டுப்பாடு (self-regulation) 3. ஊக்கமுடமை (motivation) 4. சமூக அறிவு (social skills) 5. பச்சாதாபம். (Empathy) தன்னையறிதல் (self-awareness) தன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒரு

மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள் ஏழு

மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள் ஏழு     பத்தொன்பதாம் நூற்றாண்டில் போர்கள் பல வென்றிருந்தாலும், மாவீரன் நெப்போலியனின் பெரும் புகழுக்குக் காரணம் அவர் ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர், நிர்வாக செயலாட்சியர் மற்றும் திறமையான மேலாண்மையாளர் என்பதே.  ரவீந்திரா சித்தூர் என்பவர் இந்திய வணிகப் பள்ளியின் வினைமுறைத் திறம் (Strategy) துறையின் உதவிப் பேராசிரியர். இவர்  நெப்போலியனின் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள் பற்றிய ஆய்வு செய்தவர்.  நெப்போலியனின் சாதனைகளுக்கான சில குணாதிசயங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். 1. அந்த நாட்களில் தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்வதற்கு நிறைய புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. நெப்போலியனுக்கு சிறுவயது முதலே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்வி என்பது தொடர்ச்சியான செயற்பாங்கு (Education is a continuous process) என்று நெப்போலியன் கருதினார். ஒருவருடைய பதவிக்கும், உயர்ந்த நிலைக்கும் படிப்பு உதவும் என அவர் நம்பினார். பேரரசரான அவர் அரசருக்குத் தேவையான அனைத்தும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்று எண்ணி, அவரது அரண்மனையிலேயே பல நூல்கள் நிறைந

ஆசிரியர் ஆலோசகராகலாமா?

ஆசிரியர் ஆலோசகராகலாமா? உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி நாள்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார் என்று சிந்தியுங்கள். அவர் ஏன் விசேஷம்? அவரை உங்களுக்கு ஏன் அந்த அளவு பிடித்தது? சிலர் பிரமாதமாகப் பாடம் நடத்தி நம் மனத்தில் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சிலர் தங்களுடைய ஆதரவான நடவடிக்கைகளாலேயே நம் நினைவில் நின்றிருப்பார்கள். மாணவர்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் காதுகொடுத்துக்கேட்டிருப்பார்கள், ஆகவே, நாம் அவர்களை இன்னும் நினைவில்வைத்திருப்போம். பொதுவாக, மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் இந்த இரு குணங்களுமே இருக்கும். மாணவர்கள் தங்களுடைய வளரும்பருவத்தில் பாதியைப் பள்ளியில், கல்லூரியில்தான் செலவிடுகிறார்கள். ஆகவே, மாணவர்களுடைய ஆளுமையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள். சில பள்ளிகளில், பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் என்று தனியே சிலர் இருப்பார்கள். பெற்றோருடன் உறவு முறிவுகள், உறவு பாதிப்புகள், சுயமதிப்புப் பிரச்னைகள், உடல்-தோற்றப் பிரச்னைகள், தீய பழக்கங்கள், தற்கொலைச் சிந்தனை, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது என்கிற குழப்பம் போன்ற பிரச்ன