Posts

Showing posts from February, 2019

பள்ளிக்கல்வியின் வீழ்ச்சி

பள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ; மாணவர்களின் பாதிப்பும் இந்திய அரசமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்த பின், பத்து ஆண்டுகளுக்குள் - அதாவது 1960க்குள் 14 அகவைக் குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி அளித்திட அரசு முயல வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. ஆனால் அய்ம்பது ஆண்டுகள் கழித்து - 2010இல் தான் இலவய, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடப்புக்கு வந்தது. 2018ஆம் ஆண்டில் ஆறு அகவை எய்திய சிறுவர்களில் 96 விழுக்காட்டினர் பள்ளியில் பயில் கின்றனர். ஆனால் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் கவலைக்குரியதாக இருக்கிறது. ‘பிரதாம்’ என்கிற தொண்டு நிறுவனம் 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அளவில் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது “கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை” (Annual Status of Education Report – ASER - ஆசர்) எனப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளைக் கொண்ட 596 மாவட்டங்களில் 5.5 இலட்சம் மாணவர்களிடம் ஆய்வு செய்தது. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 930 ஊர்களில் 15,749 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018ஆம் ஆண்டிற்கான ஆ

கல்விக்கரம்

                கல்விக்கரம் 'கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக..' என்பதை எப்போதோ மறந்துவிட்டோம். அதற்குப் பதில்  ‘கற்க கசடற கற்றவை கற்றபின் விற்க அதற்குத் தக ...’.என்று எதிர்க் குரலாக ஒரு வியாபார சாத்தான் ஊடுருவிக் கிடக்கிறது. ஆம் இன்று விரிந்திருக்கும் பள்ளிகள் கல்வியை போதிப்பதில்லை. மாறாக ஒரு மாணவனுக்கு மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது. ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு கல்லூரியில் முதல் ஆண்டு கற்றுக் கொடுக்கப்படும் 'செல்' பற்றிய விளக்க உரை கற்றுக் கொடுக்கப்படுகிறது. கேட்டால் , அது நீட் அடித்தளக் கல்வி என்கிறார்கள். ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து, எழுதப் போகும் நீட் தேர்வுக்கு ஏன் அவன் ஆறாம் வகுப்பிலிருந்து பயற்சி எடுக்க வேண்டும் என்று நம்மில் யாரும் கேள்வி வைப்பது கிடையாது. ஒரு மாணவனுக்கு என்ன பிடிக்கும் என்பதே நமக்குத் தெரியாது…. பிறகு எங்கே போய் மற்றவற்றை கேட்பது? நீட் தேர்வு வேண்டும்.. வேண்டாம்… என்ற விவாத்ம் இல்லை. நம் கேள்வி, மாணவர்களிடம் ஏன் கல்வி திணிக்கப்படுகிறது என்பதுதான். மருத்துவனும் , பொறியாளனும் மட்டும் போதுமா? முதலில

ஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்?

ஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்? # புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். #ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்திலுள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். # 7வது ஊதியக் குழு ஊதியத்தை அறிவித்த பிறகு தரப்படாமல் உள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். # மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். #3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் #வேலைவாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (The joint Action council of Teachers Organisation-Government Employees Organisation-JACTO-GEO) அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் அதிதமானது என்றோ, அதிகப்படியானது என்றோ சொல்லிவிட முடியாது