Posts

Showing posts from May, 2019

பள்ளிகளில் இருந்து நம் புரட்சிப் பயணம் தொடங்கட்டும்....

சாதி சார்ந்த, மதம் சார்ந்த, தனிமனித ஒழுக்கம் சார்ந்த ஒரு பதற்றமான செய்தி தினசரி ஊடகங்களாலும், social media'க்களாலும் பர‌ப்பப்படுகிறது. உடனே அதற்கான கண்டனம், வருத்தம், தொலைக்காட்சி விவாதம், சில மீம்ஸ், சில பதிவுகள் என புற்றிசல் கூட்டம் போல அதிகமாக வந்து ஓர் இரவில் காணாமல் போகிறது. இந்தப் போக்கு நம்மை "இன்று ஒரு பிரச்சனை கூட இல்லையே..!" என்று கவலைப்படும் அளவுக்கு மனநோயாளியாக மாற்றிவிட்டது. சக மனிதர்கள் சந்திக்கும் போது "சவுக்கியமா?.. பார்த்து எத்தனை நாளாச்சு ...?" என்று கேட்ட காலம் மாறி "இன்னக்கி என்ன பிரச்சனை..?" என்று கேட்கும் காலமாகி விட்டது. இதை  அரசியல் அறிவில் எற்பட்ட முன்னேற்றம் என்று பார்ப்பதா அல்லது சக மனிதர்கள் இந்த மனநோய்க்கு பலியாகி விட்டார்கள் என்று பார்ப்பதா எனத் தெரியவில்லை. எந்த சமுகத்திலும் குற்றங்கள், தவறுகள் என்பது அறவே இல்லாமல் போகாது. கொள்கை முரண்பாடுகள், சமுக சிக்கல்கள், வர்க்க வேற்றுமை சுரண்டல்கள் மொத்தமாக இல்லாமல் ஒழிந்துவிடாது. அப்படியான  சமுகத்தை ஒருநாளும் படைத்துவிட முடியாது. ஆனால் மனிதமற்ற இந்தப் போக்கு உலகம் முழுவதும்