ஆசிரியர் ஆலோசகராகலாமா? உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி நாள்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார் என்று சிந்தியுங்கள். அவர் ஏன் விசேஷம்? அவரை உங்களுக்கு ஏன் அந்த அளவு பிடித்தது? சிலர் பிரமாதமாகப் பாடம் நடத்தி நம் மனத்தில் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சிலர் தங்களுடைய ஆதரவான நடவடிக்கைகளாலேயே நம் நினைவில் நின்றிருப்பார்கள். மாணவர்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் காதுகொடுத்துக்கேட்டிருப்பார்கள், ஆகவே, நாம் அவர்களை இன்னும் நினைவில்வைத்திருப்போம். பொதுவாக, மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் இந்த இரு குணங்களுமே இருக்கும். மாணவர்கள் தங்களுடைய வளரும்பருவத்தில் பாதியைப் பள்ளியில், கல்லூரியில்தான் செலவிடுகிறார்கள். ஆகவே, மாணவர்களுடைய ஆளுமையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள். சில பள்ளிகளில், பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் என்று தனியே சிலர் இருப்பார்கள். பெற்றோருடன் உறவு முறிவுகள், உறவு பாதிப்புகள், சுயமதிப்புப் பிரச்னைகள், உடல்-தோற்றப் பிரச்னைகள், தீய பழக்கங்கள், தற்கொலைச் சிந்தனை, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது என்கிற குழப்பம் போன்ற பிரச்ன...